close
Choose your channels

நடிகை குஷ்புவின் டிசைன் டிசைனான மாஸ்க் புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்

Saturday, September 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த கொரோனா வைரஸ் காலத்தில் மாஸ்க் அணிவது என்பது இன்றியமையாத ஒன்று என்றும், உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதாரத்துறை வரை மாஸ்க் அணிதல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஒருசிலர் குறிப்பாக பெண்கள் தாங்கள் அணியும் உடைக்கேற்ற மேட்சிங் டிசைனில் மாஸ்க் அணிவதை விரும்புகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை குஷ்பு விதவிதமான டிசைனில் மாஸ்க் அணிந்துள்ள புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக அவர் அணிந்திருக்கும் உடைக்கேற்றவாறு மேட்சிங்காக அவர் மாஸ்க் அணிந்திருப்பதுதான் நெட்டிசன்கள் இடையிலான ஹாட் டாக் ஆக உள்ளது. அவர் கலர்கலராக மாஸ்க் அணிந்த புகைப்படங்கள் நெட்டிசன்களின் வரவேற்பை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, சமூக வலைத்தளத்தில் சமூக கருத்துக்களையும் தைரியமாக பதிவு பதிவு செய்வதோடு, அவ்வப்போது இதுபோன்ற வித்தியாசமான புகைப்படங்களையும் பதிவு செய்து வருவதை அடுத்து தற்போது இந்த மாஸ்க் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.