'குற்றம் கடிதல்' ரிலீஸ் தேதி. காக்கா முட்டையின் வெற்றியை பெறுமா?

  • IndiaGlitz, [Monday,August 24 2015]

சமீபத்தில் தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பல பெற்ற திரைப்படமான 'காக்கா முட்டை' மாபெரும் வெற்றி அடைந்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பொதுவாக அவார்ட் படம் என்றாலே ஓடாத படம் என்று தமிழ் சினிமாவில் இருந்த செண்டிமெண்ட்டை உடைத்த படம் காக்கா முட்டை. அந்த வரிசையில் மற்றொரு விருது பெற்ற படமான 'குற்றம் கடிதல்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட 62வது தேசிய விருதுகள் அறிவிப்பில் சிறந்த படம் என்ற தேசிய விருதை பெற்ற படம் இந்த 'குற்றம் கடிதல்' என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 16வது மும்பை திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஆயிரத்தில் ஒருவன், ஆரண்ய காண்டம் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிம்பாவே சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஒரே தமிழ்ப்படம் இதுதான் என்ற பெருமையை இந்த படத்திற்கு உண்டு.

பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது செப்டம்பர் 25 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.பிரம்மா இயக்கியிருக்கும் இந்த படமும் காக்கா முட்டை' படம் போல வெற்றி பெறும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்யின் ‘புலி’ ரிலீஸ் தேதி தள்ளிப்போனது

செப்டம்பர் 17 விநாயகர் சதுர்த்தியை இளையதளபதி விஜய்யின் ‘புலி’ படத்துடன் கொண்டாடக் காத்திருந்த ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களுக்கும்...

சிவாஜி, எந்திரனுடன் கனெக்ஷன் ஆன 'கபாலி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது என்பதையும், இந்த படத்தில் ரஜினி, 'சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தோன்றவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.....

சூர்யா படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்

கோலிவுட்டில் தற்போது பல படங்கள் தயாரிக்கப்படும்போது ஒரு டைட்டிலும், அதன்பின்னர் ரிலீஸாகும்போது ஒரு டைட்டிலும் வைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. ....

கேப்டன் விஷாலுக்கு வாழ்த்து கூறிய ஆர்யா

விஷால் நடித்த 'பாயும் புலி' படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 4 என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

விஜய்க்கு இருந்த துணிச்சல் தெலுங்கு நடிகர்களுக்கு இல்லையா?

இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய மாபெரும் வெற்றி படம் 'கத்தி'. இந்த படத்தின் ரிலீஸுக்கு ....