2வது வாரத்திலும் திருப்தியான வசூலை பெற்ற 'குற்றம் 23

  • IndiaGlitz, [Monday,March 13 2017]

அருண்விஜய் நடிப்பில் கடந்த 2ஆம் தேதி வெளியான 'குற்றம் 23' திரைப்படம் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல ஓப்பனிங் வசூல் கொடுத்தது என்பதையும், இந்த படம்தான் அருண்விஜய்யின் அதிகபட்ச ஒப்பனிங் வசூல் படம் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது வார வசூலும் திருப்திகரமாக வசூலாகியுள்ளதாக விநியோகிஸ்தர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த வார இறுதியில் 12 திரையரங்க வளாகங்களில் 121 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.24,14,920 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை 'குற்றம் 23' படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் புரமோஷனுக்கு பயன்படுத்தப்பட்டதும் கடந்த வார வசூல் அதிகரிப்புக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

More News

விஜய் மில்டனின் 'கடுகு'. சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன், கோலி சோடா, '10 எண்&#

சென்னைக்கு பின் வியட்நாமுக்கு செல்லும் முருகதாஸ் டீம்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் அதிரடி ஆக்சன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. சென்னை படப்பிடிப்பை முடித்தவுடன் இந்த படத்தின் டீம் வியட்நாமுக்கு செல்லவிருப்பதாகவும், அங்கு பாடல் மற்றும் ஒருசில ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கĭ

ஜெயம் ரவியின் 'வனமகன்' ரிலீஸ் திட்டஃம்

'தனி ஒருவன்', 'போகன்' வெற்றி படங்களுக்கு பின்னர் ஜெயம் ரவி நடித்துள்ள படம் 'வனமகன்', விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், ஜெயம் ரவியின் இன்னொரு 'பேராண்மை'யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது...

கே.வி.ஆனந்தின் 'கவண்' டிரைலர் விமர்சனம்

கோ, அயன், மாற்றான், அனேகன் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் 'கவண்'. விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், விக்ராந்த், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்Ī

100 வருட சினிமாவுலகில் டைட்டிலில் முதலிடம் பெற்ற நாயகி

தமிழ் சினிமா மட்டுமின்றி உலகின் எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் டைட்டிலில் முதலில் வருவது நாயகன் பெயர் தான் என்பது எழுதப்படாத விதி. இதற்கு ஆணாதிக்கம் என்று சொல்வதா? அல்லது ஹீரோதான் ஒரு படத்தின் முதுகெலும்பு என்பதால் டைட்டிலில் முதல் இடம் கிடைத்தது என்று கூறுவதா? என்று தெரியவில்லை...