ஒரே ஷாட்டில் நேற்று காலமான கே.வி.ஆனந்த் & செல்லத்துரை: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Saturday,May 01 2021]

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானது தமிழ் திரையுலகை அதிர வைத்தது என்பது தெரிந்தது. அவருக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சிம்பு உள்பட திரையுலக பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று சீனியர் நடிகர் செல்லத்துரை அவர்களும் காலமானார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒரே நேரத்தில் திரையுலகம் இருவரை இழந்தது என்பது மிகப்பெரிய சோகமான சம்பவம் ஆகும்.

இந்த நிலையில் தற்போது ஒரு டைட்டில் கார்டு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ’சிவாஜி’ திரைப்படத்தின் டைட்டில் கார்டு தான் அந்த புகைப்படம். அதில் ஒளிப்பதிவு இயக்குனர் கேவி ஆனந்த் என்று டைட்டில் வரும் போது அதன் பின்னணியில் நடிகர் செல்லதுரை சிறையில் இருக்கும் காட்சி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ’ஒரே ஷாட்டில் தோன்றிய இருவரும் ஒரே நாளில் மரணம் அடைந்துள்ளது எதிர்பாராத ஒற்றுமை’ என்று கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். மேலும் இதே திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த விவேக் அவர்களும் சமீபத்தில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தளபதி 65: ஜார்ஜியாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் என்ன? கசிந்த தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 65' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பது தெரிந்ததே.

இதுவரை வெளிவராத புகைப்படத்தை வெளியிட்டு அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்!

தல அஜித் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு வருகின்றனர்.

கொழுகொழுவென இருந்த அஜித் பட நடிகையா இவர்? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

அஜீத் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் கொழுகொழுவென என குண்டாக இருந்த நிலையில் தற்போது ஸ்லிம்மாக மாறியது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பச்சை பசேல் வயல்வெளி, பாவாடை தாவணி: ஷாலு ஷம்முவின் வேற லெவல் போட்டோஷூட்!

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 'மிஸ்டர் லோக்கல்' உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு

உழைப்பாளர் தினத்தில் உண்மையான உழைப்பாளருக்கு மரியாதை செய்த விஜய்சேதுபதி: வைரல் புகைப்படம்!

இன்று மே ஒன்றாம் தேதி என்பதால் உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் உழைப்பாளர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும்