தென்னாப்பிரிக்காவில் டூயட் பாடும் விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Monday,September 19 2016]

கோலிவுட் திரையுலகில் பிசியான ஹீரோக்களில் ஒருவரான விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'ஆண்டவன் கட்டளை' மற்றும் 'றெக்க' ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்து வரும் படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தகட்ட படப்பிடிப்பில் படமாக்கப்படவுள்ளதாகவும், அவற்றில் ஒரு பாடல் தென்னாப்பிரிக்காவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்த பாடல் ஒரு டூயட் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர்கள் சுபாவின் திரைக்கதை-வசனம் எழுதி வருகின்றனர்.

More News

ரஜினியை அடுத்து என்னை கவர்ந்த நடிகர். தோனி

கிரிக்கெட் தல என்று அழைக்கப்படும் தோனி நேற்று நடைபெற்ற TNPL கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது கோலிவுட்டில்...

சீயான் விக்ரமின் 'இருமுகன்'. சென்னை வசூல் நிலவரம்

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'இருமுகன்' திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது....

சூர்யாவின் 'சிங்கம் 3' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களின் வெற்றிகளை அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'எஸ் 3'. சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது...

'பைரவா' படத்தில் டான்ஸ் ஆடும் 'பாபநாசம்' நடிகர்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டதாகவும் மிக விரைவில் இதுகுறித்த தேதி வெளியாகும் என்பதையும் பார்த்தோம்.

கார்த்தியின் 'காஷ்மோரா' இசை வெளியீடு தேதி என்ன?

கார்த்தி இதுவரை நடித்த படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் 'காஷ்மோரா' என்றால் அது மிகையாகாது...