விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன்!

  • IndiaGlitz, [Sunday,April 21 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஏற்கனவே ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கும் நிலையில் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். விவசாயிகள் பிரச்சனை குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கவிருப்பதாகவும், அவர் இந்த படத்தில் பாடகி மற்றும் டான்ஸர் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த படத்திற்கு 'லாபம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது