close
Choose your channels

இலங்கையில் முதல்முறையாக 'பிகில்' திரைப்படம் செய்யும் சாதனை!

Tuesday, September 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய், அஜித் போன்ற மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் முண்டியடித்து செல்வர் என்பது தெரிந்ததே. கட்டுக்கடங்காத கூட்டம் இருப்பதால் முதல் காட்சியை பார்க்க பெரும்பாலும் பெண்கள் வருவதில்லை.

இந்த நிலையில் இந்த அசெளகரியத்தை சமாளிக்க சென்னையில் ஒருசில திரையரங்குகளில் முதல் நாளில் பெண்களுக்கு என ஒரு பிரத்யேக காட்சி கடந்த சில ஆண்டுகளாக திரையிடப்பட்டு வருகிறது. அஜித்தின் ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’, விஜய்யின் ‘சர்கார்’, மெர்சல்’ போன்ற படங்களுக்கு சென்னை உள்பட ஒருசில நகரங்களில் பெண்களுக்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சிக்கு பெண் ரசிகர்கள் குவிந்து முதல் நாளில் தங்கள் விருப்பத்திற்குரிய நாயகனின் படத்தை பார்த்து ரசித்தனர்

இந்த நிலையில் இலங்கையில் முதல் முறையாக ‘பிகில்’ திரைப்படத்தை பெண்களுக்கு என ஒரு பிரத்யேக காட்சி ஒன்றை அந்நாட்டு திரையரங்கம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை திரையுலக வரலாற்றில் பெண்களுக்கு என தனிக்காட்சி திரையிடப்படுவது இதுவே முதல்முறை என்பதே ஒரு சாதனையாக கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.