பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க படுக்கைக்கு அழைத்தார்கள்: தொகுப்பாளினியின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

  • IndiaGlitz, [Friday,July 12 2019]

திரைப்படங்களில் வாய்ப்பு கேட்க செல்லும்போது தங்களை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக பல நடிகைகள் குற்றஞ்சாட்டியுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் தவறான கண்ணோட்டத்துடன் அழைப்பு விடுத்ததாக பிரபல தொகுப்பாளினி ஒருவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஒளிபரப்பி வரும் நிலையில் விரைவில் பிக்பாஸ் 3 தெலுங்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் 3 தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பு வந்ததாகவும், அதற்கு தான் ஒப்புக்கொண்டதாகவும் கூறிய பிரபல தொகுப்பாளினி ஸ்வாதி ரெட்டி, அதன்பின்னர் பிக்பாஸ் நிர்வாகத்தினர்களிடம் இருந்து தனக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்களை சேர்ப்பதால் எங்களுக்கு என்ன பலன்? என்று தவறான நோக்கத்துடன் பேசியதாகவும், அவர்களின் பேச்சை புரிந்து கொண்ட தான், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் இருந்து பின்வாங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஸ்வேதா ரெட்டியின் இந்த குற்றச்சாட்டு தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

'அருந்ததி 2' படத்தில் அனுஷ்கா இல்லையா?

நடிகை அனுஷ்கா தமிழில் 'ரெண்டு' என்ற படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், அவருக்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் புகழ் பெற காரணமாக இருந்த படம் 'அருந்ததி'.

நான் டாக்டர் இல்ல, டான்: மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் டிரைலர்

பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரவ் ஹீரோவாக நடித்து வரும் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

'வேண்டாம்' என்று பெயர் வைத்த பெற்றோர்: 'வேண்டும்' என்று கூப்பிட்ட ஜப்பான்!

திருத்தணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண் குழந்தைக்கு 'வேண்டாம்' என்று அந்த பெண்ணின் பெற்றோர் பெயர் வைத்தனர்.

பட்டாம்பூச்சி நடனமாடும் பட்டாம்பூச்சி லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டின் இன்னொரு ஓவியாவாகவும், கள்ளங்கபடம் இன்றி சிரித்த முகத்துடனும் இருக்கும் ஒரே போட்டியாளர் லாஸ்லியா. ஜாலியாகவும் புத்திசாலித்தனத்துடனும்

வனிதாவுக்கு மணிகட்டிய தர்ஷன்: உடைகிறது அகம்பாவ சாம்ராஜ்யம்

பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோதும் சரி, கேப்டனாக இல்லாத போதும் சரி குரலை உயர்த்தி, தான் என்ற அகங்காரத்துடன் வீட்டில் வலம் வரும் ஒரே கேரக்டர் வனிதாதான்.