close
Choose your channels

எனது கருவில் பூத்த ஓர் இளைய நிலவு நீ: நயன்தாராவின் வீடியோ வைரல்!

Thursday, May 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'O2’ என்ற திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் ’சுவாசமே சுவாசமே’ என்ற பாடல் வெளியாகி இணைதளங்களில் வைரலாகி வருகிறது

விஷால் சந்திரசேகர் இசையில் ராஜேஷ் கிரிபிரசாத், மோகன் ராஜன் எழுதிய இந்த பாடலை பிருந்தா சிவக்குமார் பாடியுள்ளார். மெலடி பாடல் ஆனா இந்த பாடலை முதல் முறை கேட்கும்போதே இனிமையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று வெளியாகியுள்ள இந்த பாடலின் சில வரிகள் இதோ:

எனது கருவில் பூத்த ஓர் இளைய நிலவு நீ
எனது விழியில் வாழும் எதிர்கால கனவு நீ
உலகிலே எதுவுமே முழுமை இல்லையே
விழிகளின் நிறங்களோ கருப்பு வெள்ளையே
புயல் காற்றாய் ஒரு தேடலில் இன்று
தென்றல் ஆனதே

சுவாஸமே சுவாஸமே தேடல் இன்று முடிந்ததா
விடியலை சேர்ந்து நாமும் காணவே

நயன்தாரா, ரித்விக் உள்பட பலரது நடிப்பில் ஜி கே விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழழகன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.