எனது கருவில் பூத்த ஓர் இளைய நிலவு நீ: நயன்தாராவின் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Thursday,May 26 2022]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'O2’ என்ற திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் ’சுவாசமே சுவாசமே’ என்ற பாடல் வெளியாகி இணைதளங்களில் வைரலாகி வருகிறது

விஷால் சந்திரசேகர் இசையில் ராஜேஷ் கிரிபிரசாத், மோகன் ராஜன் எழுதிய இந்த பாடலை பிருந்தா சிவக்குமார் பாடியுள்ளார். மெலடி பாடல் ஆனா இந்த பாடலை முதல் முறை கேட்கும்போதே இனிமையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று வெளியாகியுள்ள இந்த பாடலின் சில வரிகள் இதோ:

எனது கருவில் பூத்த ஓர் இளைய நிலவு நீ
எனது விழியில் வாழும் எதிர்கால கனவு நீ
உலகிலே எதுவுமே முழுமை இல்லையே
விழிகளின் நிறங்களோ கருப்பு வெள்ளையே
புயல் காற்றாய் ஒரு தேடலில் இன்று
தென்றல் ஆனதே

சுவாஸமே சுவாஸமே தேடல் இன்று முடிந்ததா
விடியலை சேர்ந்து நாமும் காணவே

நயன்தாரா, ரித்விக் உள்பட பலரது நடிப்பில் ஜி கே விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழழகன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளனர்.
 

More News

'கே.ஜி.எஃப் 2' இயக்குனரின் அடுத்த படத்தில் கமல்ஹாசன்? என்ன கேரக்டர் தெரியுமா?

சமீபத்தில் வெளியான 'கே.ஜி.எஃப் 2'  திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், 1,300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பதும் தென்னிந்திய திரைப்படம்

பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி: இதயகோளாறு என தகவல்!

பிரபல காமெடி நடிகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு இதய கோளாறு என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே புகைப்படத்தால் மொத்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த 'சூர்யா 41' படம் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் ஒட்டுமொத்த வதந்திகளுக்கும் ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம்

சூர்யா படத்தை இயக்காததற்கு இந்த ஒரே ஒரு காரணம் தான்: லோகேஷ் கனகராஜ்

சூர்யா நடித்த படத்தை இயக்காததற்கு ஒரே ஒரு காரணம் நான் தான் என்று லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்த நீதிமன்றம்: வினோத வழக்கு

உலகெங்கும் பல வினோதமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக விலங்குகள் மேல் சில வழக்குகள் பதிவு செய்யப்படும் போது அந்த வழக்குகள் முற்றிலும்