என்னுடைய பிறந்த நாளில் ஐந்து ஸ்பெஷல்: லைலாவின் க்யூட் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Tuesday,October 24 2023]

நடிகை லைலா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தனது பிறந்த நாளில் 5 ஸ்பெஷல் என அவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்தவர் நடிகை லைலா. ’தீனா’ ’பார்த்தேன் ரசித்தேன்’ ’பரமசிவம்’ ‘பிதாமகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த லைலா, இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் இன்று ’தளபதி 68’ படத்தின் அறிவிப்பு உள்பட ஐந்து ஸ்பெஷல் என்று குறிப்பிட்டுள்ளார். தான் நடித்த ’பிதாமகன்’ என்ற திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகியுள்ளது, அதேபோல் ’சர்தார்’ திரைப்படம் வெளியாகி சமீபத்தில் ஒரு ஆண்டு நிறைவு பெற்றது, தான் முக்கிய வேடத்தில் நடிக்கும் ’தளபதி 68’ படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது, இன்று தசரா கொண்டாட்டம் மற்றும் தனது பிறந்த நாள் கொண்டாட்டம் என மொத்தம் ஐந்து ஸ்பெஷல் என குறிப்பிட்டுள்ளார்.

லைலாவின் இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

More News

சூப்பர் ஸ்டார், ஆனால் எளிமை.. மும்பையில் ரஜினியை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற நிலையில் மும்பை விமான நிலையத்தில் அவரை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர் 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எளிமை குறித்து

கவுண்டமணியின் 'ஒத்த ஓட்டு முத்தையா'படத்தின் கதை இதுவா?

 நகைச்சுவை நடிகர் கவுண்டமணி தற்போது 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

திடீரென காயமடைந்த லோகேஷ் கனகராஜ்.. கேரளாவில் என்ன நடந்தது?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேரளாவில் 'லியோ' படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக சென்றிருந்த நிலையில் அங்கு அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

ஜெயம் ரவி - நயன்தாராவின் 'இறைவன்': ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்த 'இறைவன்' என்ற திரைப்படம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை

ஷங்கர் இயக்கி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. !

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' மற்றும் ராம்சரண் தேஜா நடித்து வரும் 'கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்களை  இயக்கி வருகிறார்.