திருப்பதி ஏழுமலையான் பெயரை சொல்லி மோசடி.. கமல், ரஜினி பட நாயகியிடம் ரூ.1.5 லட்சம் மோசடி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்களில் நாயகியாக நடித்த நடிகையிடம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கித் தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரூபினி. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’மனிதன்’, ’ராஜா சின்ன ரோஜா’ உள்ளிட்ட படங்களில், மேலும் கமல்ஹாசனுடன் ’அபூர்வ சகோதரர்கள்’, ’மைக்கேல் மதன காமராஜன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்குப் பின்னர், அவர் மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆன நிலையில், அவ்வப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கித் தருவதாக கூறி, ரூபினியிடம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பெற்றதாகவும், அதன் பின்னர் அவரை தொடர்பு கொண்டபோது ஏமாற்றம் அடைந்ததாகவும், அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரூபினி, அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com