close
Choose your channels

வெப்சீரீஸில் லட்சுமிராய்: டாப்லெஸ் புகைப்படத்தால் பரபரப்பு

Wednesday, February 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரைப்படத்திற்கு இணையாக தற்போது வெப்சீரிஸ்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த வெப்சீரிஸ்களில் முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல நடிகை லட்சுமிராய் நடிக்கும் வெப்சீரிஸ் ஒன்றின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்ற ’பாய்சன்’ என்ற தொடரின் இரண்டாவது பாகமான ’பாய்சன் 2’ என்ற வெப்சீரிஸ்ஸின் பஸ்ட் லுக் போஸ்டரை ஜீ டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வரும் 30ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த வெப்சீரிஸ் போஸ்டரில் லட்சுமிராய் டாப்லெஸ் உடையுடன் நாயகன் Aftab Shivdasani உடன் இருக்கும் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் பாண்டியா என்பவர் இயக்கவுள்ள இந்த வெப்சீரீஸில் பூஜா சோப்ரா, கௌதம் குலாட்டி, தாஹீர் சபீர் உள்பட பலர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.