இளம் தம்பதியரின் கனவை நனவாக்குவாரா லட்சுமிராமகிருஷ்ணன்?

  • IndiaGlitz, [Saturday,September 16 2017]

குணசித்திர நடிகையான லட்சுமிராமகிருஷ்ணன் ஏற்கனவே 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே' ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். 

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு 'ஹவுஸ் ஓனர்ஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அசோக்செல்வன் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு ஜோடியாகவும் நடிக்கவுள்ளனர். 

சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும் நிலையில் ஒரு இளம் தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பது தான் படத்தின் மைய கருத்து என்றும் இந்த கருத்தை நகைச்சுவையுடன் இந்த படத்தில் கூறவுள்ளதாகவும் லட்சுமிராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஜோமன் டி.ஜான் என்பவர் பணிபுரியவுள்ளார்.

More News

இசையமைப்பாளர் அவதாரத்தில் பிரபல பாடகர்

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர் நடிகர் ஆவதும், நடிகர் இசையமைப்பாளர் ஆவது, ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஆவதும் இயக்குனர் தயாரிப்பாளர் ஆவதுமான நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் 'காலா': அடுத்தது அரசியல் களமா?

ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு இடையில் சில நாட்கள் ஃபெப்சி வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தளபதியின் 'மெர்சலுடன்' கனெக்சன் ஆன ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி நடித்து வரும் 'டிக் டிக் டிக்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

ரஜினியுடன் இணைந்து அரசியல் செய்ய தயார்: கமல்ஹாசன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவு ஆகியவை காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆளுமையுள்ள தலைவருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த பல தகவல்கள் ஏற்கனவே இணையதளங்களில் வெளி வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.