close
Choose your channels

லக்‌ஷ்மன் சுருதி ராமன் தற்கொலையா? அதிர்ச்சி தகவல்

Wednesday, December 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இசை நிறுவனமான லக்‌ஷ்மன் சுருதியின் இயக்குனர் ராமன் அவர்கள் நேற்று இரவு தனது வீட்டில் காலமானார் என்ற செய்தி இசை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரணமடைந்த ராமன் அவர்களுக்கு வயது 54. அவருக்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும் மனோஜ் குமார் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் ராமன் அவர்களின் மரணம் குறித்து தகவல் அறிந்த அசோக்நகர் காவல்துறையினர் உடனடியாக அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து ராமனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக ராமன் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணையின் முடிவில்தான் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

லக்‌ஷ்மன் சுருதி என்ற நிறுவனத்தை மிகவும் திறமையாக கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்த ராமன், திடீரென தற்கொலை செய்து கொண்டது திரையுலகம் மற்றும் இசையுலக பிரபலங்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவரது மறைவிற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos