லஞ்ச ஒழிப்புத்துறையில் பெண் ஐபிஎஸ் நியமனம்....! நடுங்கும் அரசியல் பிரமுகர்கள்...!

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

முன்னாள் ஐபிஎஸ்-ஆக இருந்த லட்சுமி அவர்கள், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குனராக பணி நியமனம் செய்யப்பட உள்ளார்.

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்தே, அரசு அதிகாரிகளின் வேலை குறித்த பணிகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். இதேபோல் தேர்தலுக்கு முன் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கட்சி அமைச்சர்கள் ஆட்சியின் போது செய்த குற்றங்கள் குறித்து, ஸ்டாலின் ஆளுநரிடம் புகார்கள் தெரிவித்திருந்தார். அந்தவகையில் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால், அதிமுக அமைச்சர்கள் மீதுள்ள புகார்கள் அனைத்தும் விசாரித்து தண்டனை தரப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் முன்னாள் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து எழுந்த புகார்கள், டெண்டர் முறைகேடுகள் உள்ளிட்டவற்றில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார் ஸ்டாலின். இதை உறுதிப்படுத்தும் வகையில், லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிகாரிகளை நியமிப்பதில் முக்கிய பங்கெடுத்து வருகின்றார்.

குஜராத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கைது செய்தவர் தான் ஐ.பி.எஸ். அதிகாரி கந்தசாமி. இவரை தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.-யாக தமிழக அரசு நியமித்துள்ளதால், எதிர்க்கட்சி தலைகள் கலங்கத்தில் உள்ளனர் என்றே சொல்லலாம். இதேபோல் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த லட்சுமி அவர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் அவர்களால் பிறப்பிக்கப்பட்டது.

யார் இந்த லட்சுமி...?

கடந்த 1997-ஆம் ஆண்டில் குரூப் 1 தேர்வில், தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி - யாக, பதவியேற்றவர் தான் லட்சுமி. இதன்பின் இவருக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எஸ். அதிகாரியாக நிலை உயர்த்தப்பட்டார். இவர் பணியில் நேர்மை, துணிச்சல் உள்ளிட்ட செயல்களால் தான், டி.ஐ.ஜி.யாகப் உயர் பதவியடைந்து சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகப் பணியாற்றினார். லட்சுமி அவர்கள் திறமையான காவல் அதிகாரி என்ற பாராட்டைப் பெற்றவர். கிட்டத்தட்ட 24 வருடங்கள் தமிழ்நாடு காவல் துறையில் சிறப்பாகவும், நேர்மையுடனும் பணியாற்றியுள்ளார்.

சென்னையில் தி.நகர், மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், கோவையில் துணை ஆணையராகவும், சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துறை, இணை ஆணையராகவும் பணியாற்றிய லட்சுமி அவர்களுக்கு, வரும் 2032 வரை காவல் துறையில் பணிபுரியில் கால அவகாசம் உள்ளது. ஆனால் அவர் சென்ற மாதம் தனிப்பட்ட விருப்பத்தால், ஓய்வு பெற விருப்பம் உள்ளதாக, தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அரசு அவரின் கடிதத்தை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேர்மையுள்ள பெண் காவல் அதிகாரி பணியில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்...!

More News

நடிகர் பாலசரவணன் வீட்டில் கொரோனாவால் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் திரையுலகைச் சேர்ந்த ஒருசிலரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

பாஜக பிரமுகர் புகார் எதிரொலி: பிரபல நடிகை-இயக்குனர் மீது தேசத்துரோக வழக்கு!

பாஜக பிரமுகர் ஒருவர் பதிவு செய்த புகாரின் அடிப்படையில் பிரபல நடிகை மற்றும் இயக்குனர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் இணைந்த வரலட்சுமி!

பிரபல தெலுங்கு நடிகர் என்டிஆர் பாலகிருஷ்ணா இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து

முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் கார்த்தி: வைரல் புகைப்படம்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில சுகாதாரத்துறை

தமிழ் திரைப்பட நடிகைக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்: என்ன காரணம்?

விஜயகாந்த் நடித்த 'அரசாங்கம்' கருணாஸ் நடித்த 'அம்பாசமுத்திரம் அம்பானி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த தமிழ் நடிகை ஒருவருக்கு நாக்பூர் உயர்நீதிமன்றம் ரூபாய் இரண்டு லட்சம் அபராதம்