close
Choose your channels

தனுஷின் அடுத்த படத்தில் பிரபல மலையாள நடிகர் 

Monday, October 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக அவர் 'பரியேறும் பெருமாள்' இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் லால் இணைந்துள்ளார். இந்த தகவலை லால் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படங்களான 'சண்டைக்கோழி' உள்பட பல படங்களில் லால் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

தனுஷ்-மாரிசெல்வாராஜ் படத்தில் லால் வில்லனாக நடிப்பாரா? அல்லது குணசித்திர வேடத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தனுஷ்-மாரிசெல்வராஜ் இணையும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இந்தப் படம் தனுஷின் 41 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.