'லால் சலாம்'  இசை வெளியீட்டு தேதி இதுவா? மீண்டும் ஒரு குட்டிக்கதை உண்டா?

  • IndiaGlitz, [Wednesday,November 22 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

முதல் கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் டிசம்பர் 20ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காக்கா கழுகு கதையை கூறிய ரஜினிகாந்த், ’லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டி கதையை கூறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் இசை வெளியீட்டு விழாவை அடுத்து ட்ரைலர், சிங்கிள் பாடல் உட்பட பல ப்ரொமோஷன் பணிகளையும் அடுத்தடுத்து செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

More News

ஒரு ஆசிரியர் ரெண்டு பேரையும் ஒண்ணா நடத்தனும்: கமலை சாடிய பூர்ணிமா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை போட்டியாளர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி கொண்டாலும் கமல்ஹாசனை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குற்றம் சாட்டியதே இல்லை.

பெரிய திரை வெற்றியிலிருந்து ஓடிடி ஆதிக்கம் வரை: தொடர்ந்து உச்சம் தொடும் 'இறுகப்பற்று'

திருமணமான தம்பதிகளுக்கு இடையிலான சிக்கல்களைப் பேசும் 'இறுகப்பற்று' திரைப்படம், திரையரங்க வெளியீட்டில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஓடிடி வெளியீட்டிலும் உச்சத்தை தொட்டுள்ளது

அப்படி தாண்டா சொல்வேன், ஏன்னா நான் சவுதியில் இருந்து வந்திருக்கேன்: யோகிபாபுவின் 'குய்கோ' டிரைலர்..!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு அவ்வப்போது நாயகனாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படங்கள் சில நல்ல வெற்றியை பெற்று வருகிறது என்பதையும்

'வாரணம் ஆயிரம்' அடுத்து தெலுங்கில் ரிலீசாகும் இன்னொரு சூர்யா படம்.. ரசிகர்கள் உற்சாகம்..!

சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' என்ற திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது என்பதும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான இந்த படம் செம ரொமான்ஸ் படம் என்பதால்

இனி போட்டியாளர்களுக்கு பத்திய சாப்பாடு தான்: முக்கிய பொருட்களை வெளியேற்றிய பிக்பாஸ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் அறிவிப்புகள் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டாக உள்ளன என்பதை பார்த்து வருகிறோம்.