தல தோனிக்கு லதா மங்கேஷ்கர் வைத்த உருக்கமான வேண்டுகோள்!

நேற்றைய அரையிறுதி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக வெறித்தனமான தல தோனி விளையாடியபோதிலும் துரதிர்ஷ்டவசமான கடைசி நேரத்தில் ரன் அவுட் ஆனார். இதனால் போட்டியின் முடிவு இந்தியாவுக்கு எதிராக திரும்பிவிட்டது.

இந்த நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களும், ஆதரவான கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகிறது. தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்றுகூட சிலர் கூறியுள்ளார்கள்.

இந்த நிலையில் பழம்பெரும் பாடகியும் பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'தோனி ஓய்வு முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாக செய்திகளை கேட்டு வருகிறேன். தயவுசெய்து ஓய்வு முடிவை தோனி எடுக்க வேண்டாம். உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை. நீங்கள் ஓய்வு குறித்த முடிவை இப்போது அறிவிக்க வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள்' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் வெகு அரிதாகவே டுவிட்டரில் ஒருசில கருத்துக்களை தெரிவித்து வரும் வழக்கத்தை உடையவர். தோனியின் மீதுள்ள அன்பால் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

அமலாபாலுக்காக பி.சுசீலா பாடிய பக்தி பாடல்

அமலாபால் நடித்த 'ஆடை' படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் இந்த படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது

நியூசிலாந்து சாம்பியன் என பல மாதங்களுக்கு முன்னரே கணித்த ஜோதிடர்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய அரையிறுதியில் இந்தியா தான் வெற்றி பெறும் என பல கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருந்தாலும், நியூசிலாந்து அணி வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியது

சரத்குமார்-சசிகுமார் படத்தின் டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடித்த 'நாடோடிகள் 2' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில்

நயன்தாராவை அடுத்து அஞ்சலியுடன் ரொமான்ஸ் செய்யும் யோகிபாபு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் ஒரு ஜாலியான கேரக்டரில் யோகிபாபு நடித்திருப்பார்.

நான் விளையாடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.