தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் தெலுங்கு படம்

  • IndiaGlitz, [Monday,January 07 2019]

தேஜஸ், தேஜ், அபினவ், தினேஷ் உள்பட பலர் நடிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் தின திரைப்படமாக தெலுங்கில் வெளியான திரைப்படம் 'ஹூசாரு'. எஞ்சினியரிங் கல்லூரி படிப்பை முடித்த நான்கு மாணவர்களின் அடுத்தகட்ட வாழ்க்கை குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தை தெலுங்கில் ஸ்ரீ ஹர்ஷா என்பவர் இயக்கியிருந்தார்.

இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்டை விவி கதிர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஜீவா நடித்த 'தெனாவட்டு' படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பெரும்பாலும் புதுமுகங்கள் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

விஷாலுடன் 3வது முறையாக இணையும் பிரபல இயக்குனர்

விஷால் நடித்த 'மதகஜராஜா', 'ஆம்பள' ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சுந்தர் சி, மீண்டும் விஷால் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இன்று '96' திரைப்படத்திற்கு ஒரு விசேஷமான நாள்!

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய '96' திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியானது. இந்த படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்: விரிவான தகவல்

'செக்க சிவந்த வானம்' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் மணிரத்னம், அடுத்ததாக 'பொன்னியின் செல்வன்' நாவலை மல்டி ஸ்டார்களை கொண்டு இயக்கவுள்ளார்.

மதிய உணவு, மரக்கன்றுகளுடன் விவசாயிகளை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

கஜா புயல் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. நிவாரண உதவிகள் கிடைத்துவந்தாலும்

பிரபல நடிகை மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாப பலி

பிரபல ஒடியா மொழி மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகையுமான நிகிதா மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்து பலியானார்.