close
Choose your channels

மார்டன் லுக்கில் பரதேசி பட நடிகை… வைரலாகும் ஸ்லிம்பிட் புகைப்படம்!

Friday, February 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் பாலாவின் மைல்கல் படமான “பரதேசி” படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பாராட்டை பெற்றவர் நடிகை வேதிகா. இந்தப் படத்திற்கு முன்பே நடிகர் ஆர்யா நடித்த “மதராஸி“ படத்திலும் பேசும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் முன்னணி இடத்தைப் பிடித்த இவர் அதற்குப் பின்பு தமிழில் பெரிய அளவிலான வாய்ப்பு கிடைக்காமல் மற்ற மொழிகளில் கவனம் செலுத்தினார்.

நடிகை வேதிகா தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து வந்தார். பரதேசிக்கு பின்பு காவியத் தலைவன், சக்கரக்கட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தமிழில் “முனி“ திரைப்படம் மீண்டும் இவருக்க பெரிய எண்ட்ரி கொடுத்தது. இதனால் தற்போது பிரபுதேவாவுடன் வினோதன், அதுதவிர ஜங்கிள் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வேதிகா தனது ஸ்லிம் பிட் உடல்வாகுவை போட்டோ ஷுட் மூலம் விதவிதமாக வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகை வேதிகா பதிவிடும் அனைத்துப் புகைப்படங்களும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. தற்போது மார்டன் உடை அணிந்து நடிகை வேதிகா பதிவிட்டு உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.