லதா ரஜினி உதவியால் காணாமல் போன 3 வயது சிறுமி மீட்பு

  • IndiaGlitz, [Tuesday,January 08 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த் சமீபத்தில் காணாமல் போன குழந்தைகளை மீட்கும் ஒரு அமைப்பை தொடங்கினார் என்பதும் இந்த அமைப்பின் தொடக்கவிழா சமீபத்தில் நடந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னை அருகே உள்ள திருப்போரூர் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை கடந்த அக்டோபர் மாதம் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்த நிலையில் போலீசார் கடந்த மூன்று மாதங்களை குழந்தையை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொண்ட லதா ரஜினி, அவர்களுக்கு தைரியம் கூறியதோடு, இந்த குழந்தையை மும்பையில் தன்னுடைய அமைப்பை சேர்ந்த ஒரு பார்த்ததாகவும், மும்பையில் உள்ள பிரபலம் ஒருவர் மூலமாக மும்பை கமிஷனரிடம் பேசி, குழந்தையை மீட்பது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்துக்கெண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் லதா ரஜினி கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர வேட்டை நடத்தி குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

More News

மேகா ஆகாஷ் நடித்த முதல் பாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா', சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' உள்பட ஒருசில படங்களில் நடித்து வருபவர் நடிகை மேகா ஆகாஷ்.

சிவகார்த்திகேயன் மகள் பெற்ற முதல் விருது

கடந்த கிறிஸ்துமஸ் தின படமாக வெளியான ஐந்து படங்களில் ஒன்று சிவகார்த்திகேயனின் 'கனா'.

சிம்புவின் 'மாநாடு' படத்தில் இணையும் சூப்பர்ஹிட் பட நாயகி

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'கனா' மொத்த டீமுக்கும் வில்லன் நான் தான்: வெற்றிவிழாவில் பேசிய பிரபலம்

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த வெற்றிப்படமான 'கனா' படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

ஆஸ்கார் நாயகனுக்கு கிடைத்த அமெரிக்க பதவி

ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி என்பது அனைவரும் அறிந்ததே