close
Choose your channels

லெஜண்ட சரவணன் பட நாயகியுடன் வீடியோகாலில் பேசிய லதா ரஜினிகாந்த்: வைரல் வீடியோ!

Saturday, July 31, 2021 • தமிழ் Comments

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் தற்போது ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை ஜேடி - ஜெர்ரி இயக்கி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை ஊர்வசி ரெளட்டாலாவுடன் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் வீடியோ காலில் பேசியுள்ளார். இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஊர்வசி, ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தனது தமிழ் திரைப்பட அறிமுகத்திற்கு வாழ்த்து கூறினார்கள் என்றும், லதா ரஜினிகாந்த் அவர்களிடம் பேசியது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் கூறினார்.

மேலும் குழந்தைகளுக்காக தான் நடத்தி வரும் அறக்கட்டளையில் இணைந்து பணிபுரிய லதா ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்ததாகவும் அதற்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz