close
Choose your channels

அம்மாவுக்காக அழகான மாப்பிள்ளை பார்க்கும் அசதாவின் அசத்தல் முயற்சி

Saturday, November 2, 2019 • தமிழ் Comments

பொதுவாக அம்மாக்கள் தான் மகள்களின் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்ப்பதுண்டு. ஆனால் அசதா வர்மா என்ற 22 வயது பெண்மணி தனது 50 வயது அம்மாவுக்கு அழகான மாப்பிள்ளை வேண்டும் என டுவிட்டரில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கிவிட்டதாகவும், தனது அம்மாவுக்கு 50 வயது என்றும், அழகான தனது அம்மாவிற்கு நல்ல தோற்றமும் குடிப்பழக்கம் இல்லாத மாப்பிள்ளை வேண்டும் என்றும், நன்கு செட்டில் ஆன வெஜிட்டேரியன் சாப்பிடும் மாப்பிள்ளை வேண்டும் என்றும் அசதா வர்மா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அம்மாவிற்காக மாப்பிள்ளை பார்க்க துணிச்சலாக ஒரு இளம்பெண் டுவிட்டரில் பதிவு செய்துள்ளதை பலர் மனதார பாராட்டி வருகின்றனர். இதுபோன்ற மறுமணம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும், தான் திருமணம் ஆகி வேறு வீட்டிற்கு செல்லுமுன் தனது தாய்க்கு ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற உயர்ந்து எண்ணம் கொண்ட அசதாவிற்கு வாழ்த்துக்கள் என நெட்டிசன்கள் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.

சட்டக்கல்லூரி மாணவியான அசதா தன்னைப்பற்றி தான் ஒரு கவிஞர், அரசியல் நோக்கர், ஜாலி பேர்வழி, கலை நயம் மிக்கவர், தேசபக்தி கொண்டவர் என அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz