லெபனான்: இடுபாடுகளுக்கு இடையே சிக்கிய செவிலியின் அசாத்தியம்!!! வைரலாகும் புகைப்படம்!!!

  • IndiaGlitz, [Thursday,August 06 2020]

 

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தால் உலகமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டு இருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்து இருந்தார். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதால் பெய்ரூட் தலைநகரம் முழுவதும் ஆரஞ்சு வண்ணமாக மாறியதாகவும் இதனால் 135 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் செய்திகள் தெரிவக்கின்றன. இந்நிலையில் பலர் மாயமாகி இருப்பதாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் இச்சம்பவத்தில் பெய்ரூட் துறைமுகம் அருகே இருந்த அனைத்துக் கட்டிடங்களும் சரிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் துறைமுகத்தில் அருகே இருந்த அஷ்ரஃபிஹா என்ற மருத்துவமனை கட்டிடமும் 80 விழுக்காட்டிற்கு மேல் சரிந்து விழுந்த நிலையில் ஒரு பெண் நர்ஸ் தன்னுடைய ஒரு கையில் செல்போனை கொண்டு உதவிக்கு அழைக்கிறார். மற்றொரு கையில் 3 பச்சிளம் குழந்தைகளை வாரிச் சுருட்டிக் கொண்டு பதற்றத்தோடு காணப்படுகிறார். இப்படி ஒரு புகைப்படம் தற்பாது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அஷ்ரஃபிஹா மருத்துவமனையின் கட்டிடம் சரிந்து விழுந்ததால் 4 நர்ஸ்கள் உட்பட 12 நோயாளிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த மருத்துவமனையும் மண்ணிற்குள் புதைய இருந்த நேரத்திலும் அங்கிருந்த நர்ஸ் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாது பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என நினைத்து இருக்கிறார். அவருடய புகைப்படத்தை உள்ளூர் புகைப்படக் கலைஞர் பிலால் ஜாவிஸ் என்பவர் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். இதனால் உலகம் முழுவதும் பலரும் இந்த செவிலிக்கு தற்போது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

வாரிசு நடிகருக்கு ஜோடியாகும் 'ஓ மை கடவுளே' வாணிபோஜன்!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை வாணி போஜன், அதன் பின்னர் அசோக் செல்வனின் 'ஓ மை கடவுளே' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

'மாநாடு' திரைப்படம் டிரப்பா? சுரேஷ் காமாட்சி விளக்கம்

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு'.

ஆவி பிடித்தால் கொரோனாவை விரட்டலாம்… பரபரப்பை ஏற்படுத்தும் விஞ்ஞானிகளின் புது தகவல்!!!

இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் உள்ள ஆவி பிடிக்கும் முறை அதாவது “ஸ்டீம் தெரபி” மூலம் கொரோனா வைரஸை விரட்ட முடியும் என்ற தகவலை மும்பையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் குழு ஒன்று தெரிவித்து இருக்கிறது.

தமிழகத்தில் வெற்றிப்பெற்ற பிளாஸ்மா சிகிச்சை!!! துரித நடவடிக்கையில் தமிழக அரசு!!!

தமிழகத்தில் கடந்த ஜுலை 22 ஆம் தேதி சென்னை ராஜுவ்காந்தி அரசு மருத்துவ மனையில் முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சை வங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

பறவைக்காக காரை விட்டுக்கொடுத்த பட்டத்து இளவரசர்: நவீன பாரி வள்ளல் என பாராட்டு

முல்லைக்கு தனது தேரை விட்டு கொடுத்த பாரி வள்ளல் குறித்த செய்தியை சங்கத் தமிழில் நாம் படித்திருக்கிறோம்