கரகர குரலால் வேலை இழப்பு... நியாயம் கேட்ட பெண்மணிக்கு 1 கோடி கிடைத்த சம்பவம்!

  • IndiaGlitz, [Thursday,January 20 2022]

இங்கிலாந்த நாட்டிலுள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில் சத்தமாகப் பேசிய காரணத்தால் பெண் ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த அந்தப் பெண்மணிக்கு 1 கோடிக்கும் மேல் நஷ்டஈடு வழங்கப்பட்ட சம்பவம் கவனம் ஈர்த்திருக்கிறது.

இங்கிலாந்து நாட்டிலுள்ள எக்ஸிட்ர் எனும் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் டாக்டர் அனெட் ப்ளாட். இவர் கடந்த 29 வருடங்களாக அந்தப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தபோதிலும் திடீரென பணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு டாக்டர் ப்ளாட் சத்தமான குரலில் பேசுகிறார் என்றும் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு அவருடைய அணுகுமுறை பயப்படும் படியாக இருக்கிறது என்றும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான டாக்டர் ப்ளாட் தனக்கு நியாயம் வேண்டும் என நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். மேலும் தனக்கு இயற்கையாகவே சத்தமான குரல் வளம் இருக்கிறது. இதற்காக வேலையை விட்டு நீக்குவதா என நியாயம் கேட்டிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாக்டர் ப்ளாட்டிற்கு 1 லட்சம் பவுண்ட் நஷ்டஈடு வழங்குமாறு பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.

1 லட்சம் பவுண்ட் என்பது இந்திய மதிப்பில் 1 கோடிக்கு மேல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் டாக்டர் ப்ளாட் இதன்மூலம் சத்தமான குரல் வளத்தைக் கொண்டிருப்பதெல்லாம் ஒரு குற்றமாகக் கருதி வேலையை விட்டு நீக்கிய பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தக்கப் பதிலடி கொடுத்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

More News

தடுப்பூசியை விரும்பாமல் பாடகி செய்த காரியம்… சோகத்தில் முடிந்த சம்பவம்!

செக் குடியரசு நாட்டில் பிரபல நாட்டுப்புற பாடகி ஒருவர் கொரோனா

பிக்பாஸ் பாவனிக்கு வந்த திடீர் சோதனை: ரசிகர்கள் ஆறுதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனிக்கு திடீரென சோதனை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

திரைப்பட விமர்சகர்கள் எல்லோரும் நாட்டுக்கே தேவையில்லாதவர்கள்: ஷகிலா

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒரு கவர்ச்சி நடிகை என்ற தனது இமேஜை மாற்றிக் கொண்டவர் நடிகை ஷகிலா என்பது தெரிந்ததே

பாதியில் படிப்பை விட்டு பஞ்சர் ஒட்டிய மாணவிக்கு உதவிய சிவகார்த்திகேயன்!

படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் பணம் இல்லாத காரணத்தினால் பஞ்சர் ஒட்டும் கடையில் பணிபுரிந்து வந்த மாணவி ஒருவரை சிவகார்த்திகேயன் தனது சொந்த செலவில் படிக்க வைத்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதை பெரும் சூர்யா, உதயநிதி ஸ்டாலின்!

சூர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் உலகளாவிய சமுதாய ஆஸ்கார் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.