லெஜண்ட் சரவணன் படத்தின் பாடல் காட்சி! இத்தனை கோடி செலவா?

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் அருள் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பது தெரிந்ததே இந்தப் படத்தை அஜித், விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 100 கோடி என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான நடனக்கலைஞர்கள், பிரமாண்டமான செட் என பணத்தை தண்ணீராக செலவு செய்து எடுக்கப்படும் இந்த பாடல் திரையில் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பாடல் காட்சியில் லெஜண்ட் அருள் சரவணனனுடன் நடிகை கீத்திகா திவாரி நடனம் ஆடிய காட்சிகள் படமாக்கப்பட்டது. மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக செலவு செய்து எடுக்கப்படும் இந்த படம் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

உதவியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து கொடுத்த பி.ஆர்.ஓ

கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின்போது திரையுலகினர் தங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருந்து வைத்து பரிசு கொடுப்பது வழக்கமாக இருந்து

"இந்தியக் குடியுரிமைலாம் எங்களுக்கு வேணாம்..! உண்மையான இந்து இந்த சட்டத்தை ஏற்க மாட்டான்". பாகிஸ்தான் இந்து கவுன்சில் அறிவிப்பு.

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு, எதிராக மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. புதிய சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியில்,

கைக்குழந்தையுடன் கணவர் வீட்டின் முன் தர்ணா செய்த இளம்பெண்: அதிர்ச்சி காரணம்

தென்காசி அருகே இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் கணவன் வீட்டின் முன் உட்கார்ந்து தர்ணா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

முதல்முறையாக திமுகவுடன் கைகோர்க்கும் கமல்ஹாசன்!

திமுகவுடன் மக்கள் நீதி மையம் கட்சி முதல் முதலாக கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கமல்ஹாசனை அடுத்து மாணவர்கள் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தந்த நடிகர்

குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராடி வரும் நிலையில் போராடும் மாணவர்களுக்கு நேற்று கமல்ஹாசன் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்