close
Choose your channels

சர்வதேச அங்கீகாரம் பெறும் லெஜண்ட் சரவணன் படம்: திரையுலகினர் வாழ்த்து!

Wednesday, May 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவான ’தி லெஜன்ட்’ என்ற திரைப்படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றதை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

75வது கேன்ஸ் திரைப்பட திருவிழா மே 17 முதல் 28 வரை நடைபெற்று வரும் நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். உலக நாயகன் கமல்ஹாசன், பா ரஞ்சித், இசைப்புயல் ஏஆர் ரகுமான், நயன்தாரா, பூஜா ஹெக்டே, மாதவன், பார்த்திபன் உள்பட இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கும் நிலையில் பல தமிழ் திரைப்படங்களின் டிரெய்லர்கள், போஸ்டர்கள் இந்த விழாவில் வெளியாக உள்ளன.

அந்த வகையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் வெளியாக உள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் ’தி லெஜன்ட்’ படத்தின் போஸ்டர் வெளியாக உள்ளதால் இந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக இந்த படத்தின் நாயகி ஊர்வசி ரெளட்டாலா அழைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே.டி-ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என பான் -இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.