முதல் படத்திலேயே லெஜண்ட் சரவணன் படம் செய்த சாதனை!

  • IndiaGlitz, [Monday,April 18 2022]

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜண்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜே.டி-ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகிய இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற 'மொசலோ மொசலு’ என்ற பாடல் வெளியானது என்பதும், மிகவும் கலர்புல்லாக இருந்த இந்த பாடல் இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடல் தற்போது 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்துள்ளது. மேலும் யூடியூபில் இன்னும் இந்த பாடல் டிரெண்டில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்கள் செய்யும் சாதனைகளை முதல் படத்திலேயே லெஜண்ட் சரவணன் படம் செய்த சாதனையை அடுத்து கோலிவுட் திரையுலகினரை ஆச்சரியத்தில் உள்ளனர்.

More News

ரூ.26 கோடி பிளாட்,  ரூ.1.3 கோடி ஆடிக்கார்: பரிசுமழையில் குவிந்த ரன்பீர்-ஆலியா பட் ஜோடி!

பாலிவுட் காதல் ஜோடிகளான ரன்பீர் மற்றும் ஆலியா பட் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில்

இரண்டாவது திருமணத்திற்கு நாகசைதன்யா போட்ட ஒரே ஒரு கண்டிஷன்!

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் தனது பெற்றோரிடம் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன .

த்ரிஷா வீட்டில் நடந்த துக்கமான நிகழ்வு: முறைப்படி செய்யப்பட்ட ஈமச்சடங்கு!

பிரபல நடிகை த்ரிஷா வீட்டில் நடந்த துக்கமான நிகழ்வை அடுத்து முறைப்படி ஈமச்சடங்கு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

'பீஸ்ட்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிய நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது. 

இணையத்தில் லீக் ஆகிவிட்டதா தனுஷின் 'திருச்சிற்றம்பலம்': அதிர்ச்சியில் படக்குழுவினர்!

தனுஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ஒருசில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி விட்டதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்து படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.