பண்டையக் காலத்தில் பெண் கல்வி இருந்ததா? பதில் சொல்லும் ஒற்றைச் சிற்பம்!

  • IndiaGlitz, [Saturday,October 30 2021]

பண்டையக் காலத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா? என்ற கேள்வியை இன்றைக்கும் சில வரலாற்று அறிஞர்கள் எழுப்பி வருகின்றனர். காரணம் என்னதான் நம்முடைய சங்க இலக்கியத்தில் 43 பெண் புலவர்கள் பாடல்களைப் பாடியிருந்தாலும் அதன் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறதே? என்று குறைவாக மதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பண்டையக் காலக்கட்டத்தில் பெண் கல்விக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதற்கான சான்று தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு கோவிலில் கண்டறியப்பட்டு இருக்கிறது. பதார் எனும் மாவட்டத்தில் உள்ள ஜலசங்வி ஈஸ்வரன் கோவிலில் உள்ள ஒரு சிற்பமானது, ஒரு பெண் பலகையைப் பிடித்து எழுதுவது போன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. லேகா சுந்தரி என அழைக்கப்படும் இந்தச் சிற்பத்தில் உள்ள பெண் ஒரு கையில் எழுதுகோலையும் இன்னொரு கையில் ஏட்டுச் சுவடியையும் பிடித்துக் கொண்டு இருக்கிறாள்.

ஜலசங்வியில் உள்ள சிவன் கோவில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த ஆறாம் விக்ரமாதித்யன் காலத்தில் கி.பி.1076-1226 காலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ஏட்டைப் பிடித்து எழுதும் பெண்ணின் சிற்பம் கி.பி.1110 ஆம் ஆண்டு எனவும் அறிஞர்கள் கணித்துள்ளனர். மேலும் ஜலசங்வி கோவிலில் பல சிற்பங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் ஒரு பெண் கையில் ஏட்டைப் பிடித்துக் கொண்டு எழுதுகோலை வைத்து எழுதுவது வரலாற்றில் மிகவும் பொக்கிஷமான சிற்பாகப் பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் பண்டையக் காலக்கட்டத்தில் பெண்களும் கல்வியறிவு பெற்றிருக்கின்றனர் என்பதும் நிரூபனமாகி இருக்கிறது. மேலும் கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த சிற்பத்தின் ஏட்டில் “சாளுக்கிய வம்சத்தின் விக்ரமாதித்யன் ஏழு பெருங்கடல்களுக்கு நடுவே நிலத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறான்” எனக் குறிப்பிடப்பட்டு இருப்பதாக ஆய்வறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.

More News

கமல் கூறியும் தவறை ஒப்பு கொள்ளாத பாவனி: குறும்படம் இருக்குமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரைச் செல்வியின் காயினை திட்டம் போட்டு சுருதி மற்றும் பாவனி எடுத்துவிட்ட நிலையில் இது குறித்த பஞ்சாயத்து வந்த போது தாங்கள் திட்டமிடவில்லை என்றும்

ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி? லேட்டஸ்ட் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவு திடீரென சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்

முக்கடல் சங்கமிக்கும் குமரியில் ப்ரியா பவானிசங்கர்: க்யூட் புகைப்படங்கள் வைரல்!

சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக நாயகி பிரியா சங்கர் பவானி

இன்னிக்கு பேச வேண்டியது நிறைய இருக்குது: பிக்பாஸ் கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 26 நாட்கள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டியாளர்கள் இதுவரை வெளியேறியுள்ளனர் என்பதும், ஒருவர் அவராகவே வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் மனைவி கொலை செய்யப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல: போலீஸில் புகார் அளித்த பிரபல நடிகர்!

என் மனைவி கொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு கொலை செய்யப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றும் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர்