பேரழிவு! ஏற்றுக்கொள்ள முடியாத அலட்சியம்.. ரயில் விபத்து குறித்து 'லியோ' நடிகையின் ஆவேச பதிவு..!

  • IndiaGlitz, [Saturday,June 03 2023]

பேரழிவு! ஏற்றுக்கொள்ள முடியாத அலட்சியம்.. ரயில் விபத்து குறித்து ‘லியோ’ நடிகையின் ஆவேச பதிவு..!

ஒடிசா மாநிலத்தில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் சுமார் 300 பேர் பலியாகி உள்ளதாகவும் சுமார் 1000 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய ராணுவம் உள்பட மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த விபத்து ரயில்வே ஊழியர்களின் அலட்சியம் என்று நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்பட ஒரு சில அமைச்சர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் நடிகை பிரியா ஆனந்த் இந்த விபத்து குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ’மிகப்பெரிய பேரழிவு, ஏற்றுக்கொள்ள முடியாத அலட்சியம்’ என்று பதிவு செய்துள்ளார். அவரது பதிவுக்கு பெரும்பாலான நெட்டிசன்கள் ஆதரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திடீரென வெளிநாடு கிளம்பிய அஜித்-மகிழ்திருமேனி.. என்ன காரணம்?

அஜித் நடிப்பில், மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அஜித் மற்றும் மகிழ்திருமேனி

இந்தியாவை புரட்டி போட்ட ரயில் விபத்து.. ஒடிசா விரைகிறார் அமைச்சர் உதயநிதி..!

 20 ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் நிகழும் மோசமான ரயில் விபத்தாக நேற்று நடந்த கோரமண்டலம் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து பதிவாகியுள்ளது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக

மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - ஷங்கர்? '3.0' உருவாகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்

அஜித், விஜய்,சூர்யா நடிகையின் கணவருக்கு ரூ.8000 கோடி சொத்து மதிப்பா?

அஜித், விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையின் கணவருக்கு ரூ.8000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டூ பீஸ் பிகினி.. மாலத்தீவு கடற்கரையில் மஞ்சள் மோகினி ரகுல் ப்ரீத் சிங்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்றுமுன் மஞ்சள் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.