ஹாலிவுட் ரசிகர்களுக்காக 'லியோ' குழுவினரின் மாஸ் முயற்சி.. வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Friday,November 24 2023]

தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர்களுக்கு தமிழகத்தை தாண்டி, இந்தியாவையும் தாண்டி ஹாலிவுட்டிலும் ரசிகர்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ஹாலிவுட் திரையுலக ரசிகர்களுக்காக ‘லியோ’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீசுக்கு ஒரு புதுமையான முயற்சி செய்யப்பட்டு இருப்பதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ‘லியோ’. இந்த படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் முதல் முறையாக தளபதி விஜய்யின் திரைப்படம் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு ஆங்கில மொழி திரைப்படமாகவும் வெளியாக உள்ளது. தளபதி விஜய், அனிருத் மற்றும் லோகேஷ் ஆகியோர்களுக்கு ஹாலிவுட்டிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதால் அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக இந்த புதுமையான முயற்சி செய்துள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே ‘லியோ’ படத்தை திரையரங்குகளில் ஆங்கில மொழியில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் லலித் ஒரு பேட்டியில் கூறிய நிலையில் அது கடைசி நேரத்தில் முடியாமல் போனது. ஆனால் தற்போது ஓடிடியில் ஆங்கிலத்தில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் விவகாரம்: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கெளதம் மேனன்..!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை கூட தயாரிப்பு தரப்பிலிருந்து இன்று படம்

வீரப்பனின் வாழ்க்கை வரலாறு ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ்.. டிரைலரை வெளியிட்ட ZEE5

'கூச முனிசாமி வீரப்பன்' இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன்  வீரப்பனின்  வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும்  ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு.. கடைசி நேரத்தில் வந்த பரபரப்பு தகவல்..!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நேரத்தில்

உன் அப்பா மேல நீ வச்சிருக்கிறது பாசம் கிடையாது, அது ஒரு வியாதி: 'அனிமல்' டிரைலர்..!

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்பட பலர் நடிப்பில் உருவான 'அனிமல்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து

'லால் சலாம்' படத்திற்காக சொந்த குரலில் டப்பிங் செய்த உலக கோப்பை வின்னர்.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லால் சலாம்' படத்தின் டப்பிங் பணியில் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்