சஞ்சய் தத் உடன் விஜய் மோதும் ஆக்ரோஷமான 'லியோ' போஸ்டர்.. வேற லெவல் எதிர்பார்ப்பு..!

  • IndiaGlitz, [Thursday,September 21 2023]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் கடந்த மூன்று நாட்களாக மூன்று விதமான போஸ்டர் வெளியாகிய நிலையில் இன்று ஒரு போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போஸ்டரில் சஞ்சய் தத் உடன் விஜய் மோதும் அட்டகாசமான காட்சி இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் கடந்த மூன்று போஸ்டர்களை மூன்று விதமான டேக் லைன் இருந்த நிலையில் இந்த போஸ்டரில் KEEP CALM AND FACE THE DEVIL என்ற டேக்லைன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைதியாக இருந்து எதிரியை எதிர்கொள் என்ற அர்த்தமுள்ள இந்த டேக் லைன் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மொத்தத்தில் இதுவரை வெளியாகிய நான்கு போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று உள்ளது என்பதும், இந்த போஸ்டர்களால் படத்திற்கு வேற லெவல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

எங்கேயோ பிறந்து  எங்கேயோ வளர்ந்து இங்க வந்து உசுர விட்றாங்க.. த்ரிஷாவின் 'தி ரோடு' டிரைலர்..!

நடிகை த்ரிஷா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள 'தி ரோடு' என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தூக்கி போட போறீங்களா.. இல்ல முடிச்சு போட போறீங்களா..'இறுகப்பற்று' டிரைலர்..!

ருவரை ஒருவர் காதலிக்கும்போது அன்புடனும் பாசத்துடனும் இருப்பது, ஆனால் திருமணம் ஆனபின் ஒருவருக்கொருவர்  இடைவெளி விட்டு ஒட்டாமல் இருப்பது ஆகியவை குறித்த கதையம்சம்

'லியோ' படத்தில் நான் இணைந்தது இப்படித்தான் : கிறிஸ்டோபர் நோலன் பட நடிகர் தகவல்..!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'டெனண்ட்' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் டென்சில் ஸ்மித்,  'லியோ' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக தகவல் வெளியானது

த்ரிஷாவின் திருமணம் குறித்த வதந்தி.. அவரே அளித்த விளக்கம்..!

நடிகை த்ரிஷாவின் திருமண வதந்தி குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இதற்கு த்ரிஷா முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சற்றுமுன் தனது சமூக

இனி திரைத்துறை நபர்களின் துக்க வீடுகளில் மீடியாக்களுக்கு அனுமதி இல்லை: தயாரிப்பாளர் சங்கம்..!

விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்த போது ஊடகங்கள் அதை காட்சிப்படுத்த போட்டி போட்டதும், இரங்கல் தெரிவிக்க வந்த பிரபலங்களிடம் கட்டாயப்படுத்தி பேட்டி எடுத்ததும்