'லியோ' தயாரிப்பாளர் திடீரென தொடர்ந்த வழக்கு.. இன்றே அவசர வழக்காக விசாரணை..!

  • IndiaGlitz, [Monday,October 16 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தை தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிட வேண்டும் என சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் காரணமாக 4 மணி, 7 மணி காட்சிகள் கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் ’லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. அதில் ’லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அதேபோல் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த முறையீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் முறையிட்டுள்ள நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More News

'லியோ' படம் வெற்றி அடையுமா? தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேட்டி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'தலைவர் 170' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது.

வேற லெவலில் கெட்டப் மாறிய விஜய் சேதுபதி.. இந்த பிரபல இயக்குனர் படத்திற்காகவா?

தமிழ் தெலுங்கு திரை உலகில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.  ஷாருக்கானுடன் இவர் நடித்த 'ஜவான்' திரைப்படம் சமீபத்தில்

யார் யாரை நாமினேட் பண்ணலாம்.. மாயா, பூர்ணிமா ஆலோசனை.. சிக்கப்போவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது தெரிந்ததே.

'விஷால் 34' படத்தில் இணைந்த 'லியோ' பிரபலம்.. வைரல் புகைப்படம்..!

விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'விஷால் 34' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் ஏழ நகரங்களில் விஜய் டிவி நடத்தும்  நவராத்திரி கொண்டாட்டம் !!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது.