'லியோ' புரமோ வீடியோவுக்கு கம்போஸ் செய்யும் அனிருத்.. வீடியோ வெளியிட்ட பிரபலம்..!

  • IndiaGlitz, [Monday,February 06 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதை தெரிந்தது. இந்த வீடியோவில் விஜய்யின் அதிரடி காட்சிகள் மற்றும் அனிருத்தின் பின்னணி இசை அனைவரையும் கவர்ந்தது.

இந்த வீடியோவின் பின்னணியில் ஒலிக்கும் பாடலை அனிருத் மற்றும் சித்தார்த் பாடி இருந்தனர் என்பதும் இந்த பாடலை ஹெய்சன்பெர்க் என்பவர் ஏற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்யும் போது எடுத்த வீடியோவை இந்த பாடலுக்கு பணிபுரிந்த கிடார் கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ’லியோ’ படத்திற்காக அனிருத் அற்புதமாக கம்போஸ் செய்யும் இந்த காட்சியை பாருங்கள் என அவர் பதிவு செய்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவுக்கு ஏராளமான லைஃப்களும் கமெண்ட்ஸ் குவிந்து வரும் நிலையில் இந்த வீடியோவை லைக் செய்த ஒருவர் பாடகி மானசி என்பதும் இவர் ’வாரிசு’ திரைப்படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே பாடலை விஜய் உடன் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

தனுஷ் படத்தை அடுத்து சிம்பு படத்தின் இசை வெளியீடு.. தேதி இதுதானா?

 தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது

தனுஷூக்கு பாட்டு பாட கற்று கொடுக்கும் இசைஞானி.. க்யூட் வீடியோ..!

நடிகர் தனுஷூக்கு பாட சொல்லிக் கொடுக்கும் இசைஞானி இளையராஜாவின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'லியோ' படப்பிடிப்பு தளத்தில் பயங்கர குளிர்.. எத்தனை டிகிரி தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் அந்த வீடியோ பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை

விமானத்தில் படமாக்கப்பட்ட பயங்கர ஸ்டண்ட் காட்சி.. 'சூர்யா 42' படத்தின் மாஸ் தகவல்..!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்டுடியோ கிரீன்

சேலை காஸ்ட்யூமில் தேவயானி மகள்.. அதற்குள் இவ்வளவு பெரிய பெண்ணாகிவிட்டாரா?

 அஜித், விஜய் ஒரு பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த தேவயானியின் மகள் சேலை கட்டிய இளம் பெண் போன்ற தோற்றத்துடன் உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.