close
Choose your channels

முடிய போகிறது 'லியோ' படப்பிடிப்பு.. 'தளபதி 68' தொடங்குவது எப்போது?

Monday, June 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் அவரது அடுத்த படமான ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், காஷ்மீர் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சென்னையில் இரண்டு நாள் படப்பிடிப்பு, தலக்கோணம் பகுதியில் ஐந்து நாள் படப்பிடிப்பு என அதிகபட்சம் இன்னும் ஒரு வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து மூன்று மாதங்கள் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளில் படக்குழுவினர் ஈடுபடுவார்கள் என்றும் திட்டமிட்டபடி அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என்று குறிப்பிட கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் இயக்குனர் வெங்கட் பிரபு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்றும் இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் அந்த பணியை முடித்து விடுவார் என்றும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.