மீண்டும் படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்ற 'லியோ' படக்குழு.. ஆடியோ விழா எப்போது?

  • IndiaGlitz, [Sunday,August 06 2023]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தளபதி விஜய் தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிற்கு தனது குடும்பத்துடன் ஓய்வெடுக்க சென்று இருக்கும் நிலையில் ஒரு சில காட்சிகள் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளதாகவும் அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘லியோ’ படத்தின் ஆடியோ லான்ச் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாகவும் இதற்கான இடம் மற்றும் தேதி குறித்த ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் ஆடியோ விழா குறித்த தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த விழாவில் விஜய்யின் பேச்சை கேட்க அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் ‘லியோ’ திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை இந்த படம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ள ‘லியோ’ படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

இலியானாவுக்கு திருமணம் நடந்தது எப்போது? குழந்தை பிறந்த பின் வெளியான தகவல்..!

நடிகை இலியானா திருமண அறிவிப்பை வெளியிடாமலேயே  கர்ப்பம் குறித்த தகவலை வெளியிட்டது அவரது ரசிகர்களுக்கு பெரும்  பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது குழந்தை பிறந்த பிறகு அவரது திருமணம்

ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசா? நீச்சல் குள பிகினி போட்டோஷூட்டில் மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் 'இறுகப்பற்று': முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ்..!

வெவ்வேறு விதமான கதைக் களங்களைச் சொல்வதிலும், படைப்பாற்றலின் எல்லைகளை விரிவாக்குவதிலும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் பொடன்ஷியல் ஸ்டூடியோஸ். 'மாயா', 'மாநகரம்',

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஒரிஜினல் சீரிஸ் 'மத்தகம்': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  தங்களது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "மத்தகம்"  சீரிஸின் ட்ரெய்ல சமீபத்தில் வெளியிட்டது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை

கிளாமர் உடையில் மழையில் நனையும் 'கங்குவா' நடிகை.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' திரைப்படத்தில் நாயகி ஆக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை மற்றும்