ஸ்பைடர்: டீசரில் பெற்ற வெற்றியை திரையிலும் பெறுமா?

  • IndiaGlitz, [Saturday,June 03 2017]

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்பைடர்' திரைப்படம் வரும் தசரா திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டுமே இந்த படம் வெளியாகவுள்ள போதிலும், கரண்ஜோஹர் உள்பட பல அகில இந்திய திரையுலக பிரபலங்கள் இந்த டீசரை பார்த்து ஆச்சரியம் அடைந்து தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

'ஸ்பைடர்' படத்தின் டீசர் வெளியான 48 மணி நேரத்தில் 9.6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் தென்னிந்திய அளவில், வெளியான 24 மணி நேரத்தில், அதிக பார்வையாளர்களை பெற்ற டீசரும் இதுதான். அஜித்தின் 'விவேகம்', ரஜினியின் 'கபாலி', விஜய்யின் 'பைரவா' படங்களின் டீசரை இந்த டீசர் பின்னுக்கு தள்ளிவிட்டது. அதேபோல் வசூலிலும் மற்ற படங்களின் சாதனையை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தென்னிந்தியாவில் முதல் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற முதல் 10 டீசர்கள் இவைதான்:

1. ஸ்பைடர்: 6.3 மில்லியன்

2. விவேகம்: 6.09 மில்லியன்

3. கபாலி: 5.1 மில்லியன்

4. கட்டமராயுடு: 3.7 மில்லியன்

5. பைரவா: 2.85 மில்லியன்

6. எஸ் 3: 2.74 மில்லியன்

7. கைதி எண் 150: 2.7 மில்லியன்

8. DJ: 2.3 மில்லியன்

9. தெறி: 2.3 மில்லியன்

10. சாஹோ: 2.2 மில்லியன்

More News

தியாக செம்மல் தினகரனே வருக வருக! அப்ப காந்தி, காமராஜர் எல்லாம் யார்?

சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையனை எதிர்த்து சிறை சென்ற காந்தி, காமராஜர் போன்ற தியாக செம்மல்கள் விடுதலையானபோது கூட இந்த வரவேற்பு இருந்திருக்குமா? என்பது சந்தேகம் தான்...

சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் எப்போது?

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக பதவி உயர்வு பெற்ற சந்தானம் 'தில்லுக்கு துட்டு', 'இனிமே இப்படித்தான்' போன்ற படங்களை அடுத்து தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சர்வர் சுந்தரம். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது சென்சாருக்கும் அனுப்பியாகிவிட்டது...

சன்னிலியோனுக்கு கிடைக்கும் மரியாதை கூட எனக்கு இல்லை. வேலுபிரபாகரன்

பிரபல இயக்குனர் வேலுபிரபாகரன் இன்று நடிகை ஷெர்லியை திருமணம் செய்த நிலையில் அவர் அளித்த பரபரப்பான பேட்டி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த பேட்டியில் இன்றைய காலத்தில் ஆபாசம் அனைவரின் கையில் உள்ளது என்றும், ஆபாச படங்களையும் நாம் இயக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்...

'மாரி 2' படம் குறித்த முக்கிய அறிவிப்பு. பாலாஜி மோகன்

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படம் 'மாரி'. அனிருத்தின் அட்டகாசமான இசையில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் தொடங்கவிருப்பதாக இயக்குனர் பாலாஜி மோகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறியதை ஏற்கனவே பார்த்தோம்...

மோகன்லாலின் 'வில்லன்' படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகை

கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உன்னிகிருஷ்ணன் இயக்கி வரும் திரைப்படம் 'வில்லன்'. இந்த படத்தில் மோகன்லால் முன்னாள் காவல்துறை அதிகாரி மாத்யூ மஞ்சூரன் கேரக்டரில் நடித்து வருகிறார்...