கவினின் 'லிஃப்ட்' படத்தில் என்ன பிரச்சனை: விளக்க அறிக்கை!

  • IndiaGlitz, [Monday,September 13 2021]

கவின் நடிப்பில் ‘லிஃப்ட்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிரச்சினை குறித்து லிப்ரா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈகா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘லிஃப்ட்’ திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை எனது லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போல் 50% முன்பணம் செலுத்தி உள்ளோம். மீதி 50 சதவீதம் தொகை படத்தின் வெளியீட்டிற்கு முன் செலுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலைக்கு பின் தியேட்டர்கள் திறந்தவுடன் அக்டோபரில் படத்தை தியேட்டரில் வெளியிடலாம் என முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக தயாரிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். ஆனால் அவர் எங்கள் அழைப்புகளை அவர் எடுப்பதில்லை. இது சம்பந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம்.

சங்கத்திலிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதும் நிறுத்து பட தயாரிப்பாளர் எந்த பதிலும் அளிக்கவில்லை. தற்போது லிப்ட் பட தயாரிப்பாளர் லிப்ரா புரோடக்சன் செய்து கொண்ட ஒப்பந்தம் முறித்து கொள்ளப்பட்டது என தானாக ஒரு வேடிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளார். ‘லிஃப்ட்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை இன்னும் எங்கள் அகையில் தான் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்திக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

பள்ளிக்கு லீவு போட்டுவிட்டு சைடு வேலைப்பார்த்த ஆசிரியர்… வசமா மாட்டிய சம்பவம்!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் கடந்த 3 வருடங்களாகத் தனக்கு உடல்நிலை சரியில்லை

ரோஹித் சர்மாவுக்கு கேப்டன்சியா? பிசிசிஐ என்ன சொல்கிறது?

டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு இந்திய குறைந்த ஓவர் கிரிக்கெட் அணிக்கு அதாவது ஒருநாள்

லேட்டஸ்ட்டாக மாலத்தீவு சென்ற ரஜினி, தனுஷ், சிம்பு பட நடிகை!

பிரபல நடிகைகள் பலரும் கடந்த சில மாதங்களாக மாலத்தீவு சுற்றுலா சென்று வருகின்றனர் என்பதும் குறிப்பாக அவர்கள் மாலத்தீவில் பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய

வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் மாளவிகா: வைரல் புகைப்படம்

விஜய் டிவியில் மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் என்பதும் தற்போது 8வது சீசன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டெட் பாடியாக நடிக்க சந்தேகம் கேட்ட நடிகை!

டெட் பாடி கேரக்டரில் நடிக்க இயக்குனர் மற்றும் ஹீரோவிடம் சந்தேகம் கேட்ட நடிகை குறித்த தகவல் தற்போது வந்துள்ளது