மகாலட்சுமியே எனக்கு மனைவியாக கிடைத்துள்ளார். தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன்

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. 

திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரும் புதுமண தம்பதியரான ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கருக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். 

தனது திருமணம் குறித்து பேசிய ரவீந்தர் சந்திரசேகரன், மகாலட்சுமி போல் பெண் அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள் என்றும் ஆனால் மகாலட்சுமியே தனது வாழ்க்கையாக கிடைத்துள்ளதாகவும் கூறினார். 

ரவீந்தர் சந்திரசேகரன் தனக்கு வாழ்க்கைத் துணையாக கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய மகாலட்சுமி சங்கர், வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

More News

சிலிண்டர் விலை ரூ.91.50 குறைந்தும் இல்லத்தரசிகள் அதிருப்தி: ஏன் தெரியுமா?

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதும் அந்த வகையில் இன்று சிலிண்டர் விலை குறைப்பு குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த 'ஜெயிலர்' நடிகர்!

தனுஷின் அடுத்த திரைப்படமான 'கேப்டன் மில்லர்'  திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணையும் பிரபல தமிழ் ஹீரோ?

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகயிருக்கும் 'ஜெயிலர்' படம் குறித்த அறிவிப்பு

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்யும் அடுத்த பிரபலத்தின் படம் இதுதான்!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபல நடிகர்களின் திரைப்படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

காதலியை கரம்பிடித்தார் 'குக் வித் கோமாளி' புகழ்:  வைரலாகும் திருமண புகைப்படங்கள்

'குக் வித் கோமாளி'  உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான புகழ் தனது நீண்ட நாள் காதலியை இன்று திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே