விக்னேஷ் சிவன் பட டைட்டிலுக்கு எதிர்ப்பு.. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் நோட்டீஸ்..!

  • IndiaGlitz, [Sunday,January 07 2024]

விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தின் டைட்டிலை சமீபத்தில் அறிவித்த நிலையில் அந்த டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு ’எல்ஐசி’ அதாவது லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் தனக்கு சொந்தமானது என ஏற்கனவே ஒரு இயக்குனர் போர்க்கொடி தூக்கிய நிலையில் தற்போது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி நிறுவனம் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அந்த நோட்டீஸில் ‘எல்ஐசி என்பது தங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட பெயர் என்றும் அதை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும் தங்கள் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை குறைக்கும் விதமாக இந்த படத்தின் டைட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த நோட்டீஸ் பெற்றுக் கொண்ட ஏழு நாட்களில் படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும், இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை விக்னேஷ் சிவன் படக்குழு எப்படி அணுகப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

பசியோட சுத்திகிட்டு இருக்குற சிங்கத்துக்கு ஒரு இரை கிடைக்குது.. 'கேப்டன் மில்லர்' டிரைலர்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

'தக்லைஃப்' படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்.. அதில் ஒருவர் 'நாயகன்' நடிகர்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் 'தக்லைஃப்'. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இம்மாத இறுதியில் இந்த படத்தின்

துரத்தி துரத்தி அடிப்பேன்.. கமல்ஹாசன் முன் போட்டியாளரை மிரட்டிய பூர்ணிமா!

டைட்டில் பட்டம் இல்லாமல் சும்மா வீட்டுக்கு வந்தால் துரத்தி துரத்தி அடிப்பேன் என சக போட்டியாளரை பூர்ணிமா, கமல்ஹாசன் முன்னிலையில் கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத எலிமினேஷன்.. இந்த வாரமும் மாயா தப்பித்துவிட்டாரா?

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் பூர்ணிமா மட்டும் புத்திசாலித்தனமாக 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்து விட்டு வெளியேறி விட்டார்

'அயலான்' ரிலீசுக்கு பின் ரசிகர்களுக்கு இன்னொரு ஆச்சரியம்.. சிவகார்த்திகேயன் மாஸ் பிளான்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம்  வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு சில நாட்களில் ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி கொடுக்க