நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் 'பீஸ்ட்' போலவே வசூல் செய்த 'சர்காருவாரி பாட்டா'

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்த போதிலும் முதல் நாளில் அந்த படம் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதேபோல் சமீபத்தில் வெளியான மகேஷ்பாபுவின் ‘சர்காருவாரி பாட்டா’ திரைப்படத்திற்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தபோதிலும் முதல் நாளில் உலக அளவில் 75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

‘சர்காருவாரி பாட்டா’ படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் பல நெகட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் குவிந்தது. மகேஷ்பாபு நடிப்பு நன்றாக இருந்தாலும் திரைக்கதை மற்றும் கீர்த்தி சுரேஷின் கேரக்டருக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் அதே நேரத்தில் இந்த திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் முதல் நாளில் சுமார் 34 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தை அடுத்து அதிக ஓப்பனிங் கிடைத்த படம் ‘சர்காருவாரி பாட்டா’ என கூறப்படுகிறது. அதேபோல் உலக அளவில் இந்த படம் 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’பீஸ்ட்’ படம் போலவே நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி ‘சர்காருவாரி பாட்டா’ திரைப்படம் முதல் நாளில் நல்ல வசூல் செய்துள்ளது படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

சன்பாத் புகைப்படங்களை பகிர்ந்து தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகை!

பிகினி உடையில் தோழியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தனது தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நடிகை மௌனி ராய் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் 

'டான்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? 'டாக்டர்' வசூலை முந்துமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'டான்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய

அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் 'பீஸ்ட்' பூஜா ஹெக்டே: ஹீரோ யார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த பூஜா ஹெக்டே, அஜித் நடித்த 'வீரம்' படத்தின் ரீமேக்கில் தமன்னா வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

பாத்ரூமில் மர்மமாக மரணம் அடைந்த 21 வயது நடிகை: கணவரிடம் தீவிர விசாரணை!

 21 வயது நடிகை பாத்ரூமில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .

ஆர்ஜே விக்னேஷ்காந்துக்கு திருமணம்: மணமகளுடன் எடுத்த புகைப்படம் வைரல்

நடிகர், ஆர்ஜே, பட்டிமன்ற பேச்சாளர், யூடியூபர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் காந்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் மணமகளுடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது .