ரஜினி பயோபிக்கில் தனுஷ்: பிரபல இயக்குனர் விருப்பம்!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய திரையுலகில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களை உருவாக்கும் முயற்சிகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் தமிழிலும் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது,

அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க விரும்புவதாக பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா உள்பட பல வெற்றிப்படங்களை படங்களை இயக்கிய லிங்குசாமி தற்போது ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் கூறியதாவது: ரஜினிகாந்த் அவர்களை வைத்து இதுவரை நான் படம் எதுவும் இயக்கவில்லை. ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. ஏனெனில் நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரது ஸ்டைல் நடிப்பு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ரஜினி கேரக்டரில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும். ரஜினி கேரக்டருக்கு தனுஷ் தோற்றம் சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. அதேபோல் ரஜினியின் ஸ்டைலும் தனுஷூக்கு நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று லிங்குசாமி கூறியுள்ளார்

தனது வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு ரஜினி ஒப்புதல் தருவாரா? அதில் தனுஷ் நடிக்க விருப்பப்படுவாரா? லிங்குசாமியின் ஆசை நிறைவேறும? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 

More News

பிக்பாஸ் பாலாஜிக்கு ரெட் கார்டா? பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. நிகழ்ச்சியில் சண்டை சச்சரவு அதிகமாக இருந்தாலும் காமெடி மற்றும்

அமெரிக்காவையே பார்த்து- இந்தியாவிடம் போய் பாடம் படிங்க… வைரலாகும் டிவிட்!!!

கடந்த 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அந்த நாட்டு தேர்தல் விதிமுறைப்படி பெரும்பாலான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே தபால் ஓட்டுகளை செலுத்தி விட்டனர்.

பிக்பாஸ் சனம்ஷெட்டி வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் சனம்ஷெட்டியின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்ததை

மலை உச்சியில் இருந்து இளம்பெண் எடுத்த செல்பி… அதற்குப்பின் நடந்த சோகச் சம்பவம்!

செல்பி மோகம் மனிதர்களை எந்த எல்லைக்கும் கொண்டுபோய் விட்டு விடுகிறது. மத்தியப்பிரதேசத்தின் மலைப்பாங்கான சுற்றுலா பகுதியில் இருந்து

ஹாட்ரிக் சாதனை… 2 முறை கின்னஸ் சாதனை புரிந்த 5 வயது சென்னை சிறுவன்!!!

பொதுவாக சிறிய வயது குழந்தைகள் கார்ட்டூனை பார்த்து விட்டாலே போதும் செம குஷியா மாறிடுவாங்க..