close
Choose your channels

ஷாருக்கான் - அட்லி படத்தின் டைட்டில் குறித்த ஆவணம் லீக்!

Thursday, September 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் நாயகிகளாக நயன்தாரா மற்றும் பிரியாமணி நடிக்க உள்ளனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை அருகே உள்ள துக்காராம் நகர் என்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடப்பதற்காக அனுமதி கேட்டு எழுதப்பட்ட கடிதம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த கடிதத்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் ’லயன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கும்படி மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அட்லீ, ஷாருக்கான், படத்தின் டைட்டில் ’லயன்’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டர் அல்லது டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தளபதி விஜய் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.