ஷாருகான் படத்தில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா? படக்குழுவினர் விளக்கம்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ’லயன்’ என்ற திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் ஷாருக்கான், நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் தற்போது போதைப்பொருள் வழக்கில் சிக்கி இருப்பதை அடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியாததால் நயன்தாரா கொடுத்த கால்ஷீட் வீணாகிவிட்டதாகவும் அதுமட்டுமின்றி நயன்தாராவின் கேரக்டர் திடீரென முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்த வதந்திகளுக்கு படக்குழுவினர் பதில் அளித்தபோது நயன்தாரா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறி உள்ளனர். மேலும் இந்த படத்திற்கு நயன்தாராவுக்கு பதிலாக சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வரும் தகவலையும் அவர்கள் மறுத்து உள்ளனர்

முன்னதாக இந்த படத்தில் சமந்தா தான் முதலில் தேர்வு செய்யப்பட்டதாகவும் ஆனால் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்ததை அடுத்தே இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'இது வேத வாக்கு': சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' டிரைலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்றுமுன் டிரைலர் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

பலருக்கு விஷம் கொடுத்தேன்…. டாக்டர் அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஒருவர் 100க்கும்

சைட்டில் பெண்களே இல்லை? டேட்டிங் ஆப் மீது வழக்குத் தொடுத்த பலே இளைஞர்!

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் பயன்படுத்தும் டேட்டிங் ஆப்பில் பெண்களே இல்லை, தரவுகளை

இந்த அரசாங்கம் பதில் சொல்லியே ஆகணும்: ஜிவி பிரகாஷின் 'ஜெயில்' டீசர்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஜெயில்' திரைப்படம் நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை சமீபத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்

பாவனி, மதுமிதாவுக்கு பிக்பாஸ் கொடுத்த தண்டனை!

பாவனி மற்றும் மதுமிதா ஆகிய இருவருக்கும் பிக்பாஸ் நெருப்பும் ஓட்டும் தண்டனையை கொடுத்த காட்சி இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் உள்ளன.