சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யா-ஜோதிகா படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,February 10 2021]

18வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் தமிழ் படங்களின் பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த படங்கள் இடம்பெற்றுள்ளன.

பிப்ரவரி 18 முதல் 25-ம் தேதி வரை சென்னையில் 18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 91 படங்கள் திரையிடப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 91 படங்களில் 13 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 13 படங்களின் பட்டியல் பின்வருமாறு:

1. கல்தா
2. லேபர்
3. சூரரை போற்று
4. பொன்மகள் வந்தாள்
5. மழையில் நனைகிறேனே
6. மை நேம் இஸ் ஆனந்தன்
7. காட்ஃபாதர்
8. தி மஸ்கிட்டோ ஃபிலாசிபி
9. சியான்கள்
10. சம் டே
11. காளிதாஸ்
12. க/பெ ரணசிங்கம்
13. கன்னிமாடம்

இவற்றில் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,.