தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு: எந்தெந்த கடைகளுக்கு விதிவிலக்கு?

  • IndiaGlitz, [Saturday,May 08 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் அதிகமாக பாதித்து வருவதை அடுத்து மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மே 10ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24-ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகள் உள்பட எந்த ஒரு கடைகளும் திறக்கப்படாது என்றும் ரயில் மற்றும் விமான பயணிகளுக்கு செல்பவர்கள் மட்டும் டிக்கெட் காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் பல சரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் மட்டும் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் இ-காமர்ஸ் நிறுவனங்கள் காய்கறிகள், பழங்கள், இறைச்சி மற்றும் மீன் வினியோகம் செய்ய நண்பகல் 12 மணிவரை அனுமதிக்கப்படும்

பலசரக்கு, காய்கறி, பால் கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது என்றும் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,