பேருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அனுமதி: ஜூன் 28 வரை ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்?

  • IndiaGlitz, [Sunday,June 20 2021]

தமிழகத்தில் மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 50% பயணிகளுடன் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி; சென்னை மெட்ரோ ரயில் இயங்கவும் அனுமதி

50 சதவீத இருக்கைகளுடன் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி

வாடகை வாகனங்கள், டாக்சி, ஆட்டோக்களில் இ-பதிவு இன்றி செல்ல அனுமதி. வாடகை டாக்சிக்களில் ஓட்டுநர் தவிர 3 பேர் பயணம் செய்யலாம். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் மட்டும் பயணிக்க அனுமதி

தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள்‌, காய்கறிகள்‌, இறைச்சி மற்றும்‌ மீன்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

காய்கறி, பழம்‌ மற்றும்‌ பூ விற்பனை செய்யும்‌ நடைபாதைக்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

உணவகங்கள்‌ மற்றும்‌ அடுமணைகளில்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌. மின்‌ வணிகம்‌ மூலம்‌ உணவு விநியோகம்‌ செய்யும்‌ அனைத்து மின்‌ வணிக நிறுவனங்கள்‌ மேற்கண்ட நேரங்களில்‌ மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

இதர மின்‌ வணிக சேவை நிறுவனங்கள்‌ அனைத்தும்‌ காலை 06.00 மணி முதல்‌ இரவு 09.00 வரை இயங்கலாம்‌.

இனிப்பு மற்றும்‌ காரவகை விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

அரசின்‌ அனைத்து அத்தியாவசியத்‌ துறைகள்‌ 100% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. இதர அரசு அலுவலகங்கள்‌, 50% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

சார்‌ பதிவாளர்‌ அலுவலகங்கள்‌ முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்‌,

அனைத்து தனியார்‌ நிறுவனங்கள்‌, 33% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 100 “சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்‌.

இதர தொழிற்சாலைகள்‌ 33% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மின்‌ பொருட்கள்‌, பல்புகள்‌, கேபிள்கள்‌, ஸ்விட்சுகள்‌ மற்றும்‌ ஒயர்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மிதிவண்டி மற்றும்‌ இருசக்கர வாகனங்கள்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

ஹார்டுவேர்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

வாகனங்களின்‌ உதிரிபாகங்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9,00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

கோயம்முத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் இல்லை; நடைமுறையில் உள்ள தளர்வுகளே தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு