ஜோடியாக சிஎஸ்கே மேட்ச் பார்க்க சென்ற லோகேஷ் - ஸ்ருதிஹாசன் .. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,March 23 2024]

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியை பார்க்க பல திரையுலக நட்சத்திரங்கள் வந்திருந்தார்கள் என்பது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பார்த்திருப்போம்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ஜோடியாக இந்த போட்டியை பார்க்க வந்திருந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசன் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் பாடிய ஆல்பம் பாடலான ‘இனிமேல்’ டீசர் சமீபத்தில் வெளியானது என்பதும் இதில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்திருக்க, இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்தது என்று ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த ஆல்பம் பாடல் நாளை மறுநாள் அதாவது மார்ச் 25ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பாடலின் டீசர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் நேற்று சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி போட்டியை பார்க்க வந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வரும் நிலையில், இந்த புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செய்யுங்கள்.

More News

நான் வேட்பாளர் ஆனது எனக்கே தெரியாது: கடலூரில் போட்டியிடும் தங்கர்பச்சான் பேட்டி..!

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அதில் கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுவதாக

உதய் கார்த்திக் நடிக்கும் “ஃபேமிலி படம்: தொடங்கியது படப்பிடிப்பு மற்றும் பூஜை..!

UK Creations சார்பில் K பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும், அழகான ஃபீல் குட் எண்டர்டெயினர் திரைப்படமான  “ஃபேமிலி படம்”

மறைந்த ஆனந்த கண்ணன் பிறந்த நாள்.. மறக்காமல் வாழ்த்து சொன்ன சன் டிவி பிரபலம்..!

சன் டிவியில் ஆங்கராக இருந்த ஆனந்த கண்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலமான நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு சன் டிவி பிரபலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' மூத்த மருமகள் இவர்தானா? 4 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் நடிகை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் பிரபல நடிகை ஒருவர் திருமணத்திற்கு பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து ரீஎண்ட்ரி

ரேசன் அரிசியை ருசி பார்த்துருச்சு, இன்னிக்கு கண்டிப்பா வரும்: ஜிவி பிரகாஷின் 'கள்வன்' டிரைலர்..!

ஜிவி பிரகாஷ் நடித்த 'ரிபெல்' என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவர் நடித்த இன்னொரு திரைப்படமான 'கள்வன்'