'தலைவர் 171' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார்? வேற லெவலில் யோசிக்கும் லோகேஷ் கனகராஜ்..!

  • IndiaGlitz, [Friday,February 16 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ திரைப்படத்தின் கதையில் வில்லன் கேரக்டர் வலிமையானது என்பதால் அந்த கேரக்டரில் நடிக்க பிரபல நடிகரை லோகேஷ் கனகராஜ் வேற லெவலில் யோசித்து வைத்திருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’வேட்டையன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 171’ என்ற படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் சில பிரபலங்கள் நடிப்பதாக தகவல் கசிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வலிமையான வில்லன் கேரக்டரில் நடிக்க ராகவா லாரன்ஸ் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் ரஜினிக்கு வில்லனாக நடித்தால் வேற லெவலில் இருக்கும் என்று லோகேஷ் யோசித்து உள்ளதாகவும் அவர் மட்டுமின்றி இன்னும் சில பிரபல நட்சத்திரங்களும் இந்த படத்தில் இணைவர் என்றும் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

சிம்பு இதுவரை நடிக்காத கேரக்டர்.. 'எஸ்டிஆர் 48' படத்தின் சூப்பர் அப்டேட்..!

சிம்புவின் அடுத்த படமான 'எஸ்டிஆர் 48' திரைப்படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதில் ஒரு வேடம் அவர் இதுவரை நடிக்காத கேரக்டர் என்ற ஆச்சரிய தகவல்கள் தற்போது

லோகேஷ் கனகராஜ் செய்தது ரொம்ப தப்பு.. டப்பிங் யூனியன் நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

டப்பிங் யூனியனில் உறுப்பினராக இல்லாத ஒருவரை டப்பிங் பேச வைத்தது லோகேஷ் கனகராஜ் செய்த தவறு என டப்பிங் யூனியன் நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் பேட்டி அளித்துள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது அசோக் செல்வனின் சூப்பர்ஹிட் திரைப்படம்..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, பல புதிய தமிழ் சூப்பர் ஹிட் திரைப்படங்களை  ஸ்ட்ரீம் செய்து வருகிறது.

அவர் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லை, நானே போயிருவேன்: விஜய் அரசியல் கட்சி குறித்து இயக்குனர்..!

விஜய் அழைத்தால் அவருடைய கட்சியில் இணைவீர்களா என்று பிரபல இயக்குனரிடம் செய்தியாளர்களுக்கு கேட்டபோது 'நல்ல விஷயத்துக்கு அவர் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை, நானே போயிடுவேன்' என்று பதில் அளித்துள்ளார்.

விஜய்யின் 'தளபதி 69'  இயக்குனர் பட்டியலில் இணைந்த இன்னொரு இயக்குனர்.. மீண்டும் ஒரு 'வாரிசு' திரைப்படமா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி படம் என்று கூறப்படும் 'தளபதி 69' படத்தின் செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற